என் மலர்
நீங்கள் தேடியது "ரோகித் சர்மா"
- சேவாக் 90 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
- ரோகித் சர்மா 88 சிக்சர்கள் அடித்துள்ளார். அதை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
ஜெய்ஸ்வால் (13), கருண் நாயர் (40), சுப்மன் கில் (16) அடுத்தடுத்து ஆட்டமிழக்க கே.எல். ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இன்றைய 3ஆவது நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல்- ரிஷப் பண்ட் ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது.
ரிஷப் பண்ட் ஸ்கோரி 8 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும். 2 சிக்சர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 88 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார். சேவாக் 90 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். எம்.எஸ். டோனி 78 சிக்சர்கள் அடித்துள்ளார்.
இன்னும் 3 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய பேட்டர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைப்பார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடினார்.
- இங்கிலாந்துக்கு எதிரான U19 ஒருநாள் தொடரில் ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு ரோகித் சர்மா தான் கையொப்பமிட்ட பேட்டை பரிசாக கொடுத்தார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆயுஷ் மாத்ரே பகிர்ந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடினார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான U19 ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.
2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.
தற்போது 38 வயதான ரோகித் சர்மா 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார். இருப்பினும் அவருக்கு அந்த ஒருநாள் உலகக்கோப்பை வரும்போது வயது 40-ஐ எட்டிவிடும். இதனால் அவர் அதுவரை விளையாடுவாரா? என்ற கேள்வி நிலவுகிறது. இருப்பினும் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று ரோகித் சர்மா கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அவர் வீரராக தொடருவாரா? இல்லையா? என்பதை குறித்து எதுவும் முடிவெடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இது இந்திய கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரோகித் தலைமையில் ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் விளையாடிய இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது. அதுவும் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில்தான் அந்த தோல்வி வந்தது. மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்தியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.
- என் தந்தை எப்போதும், டெஸ்ட் கிரிக்கெட் மீது தனி பிரியம் கொண்டுள்ளார்.
- அவருக்கு புதிய தலைமுறை கிரிக்கெட் பிடிக்காது.
இந்திய வீரர் ரோகித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் திடீரென ஓய்வை அறிவித்தது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரோகித் சர்மா புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். சத்தீஷ்வர் புஜாராவின் மனைவி பூஜா புஜாரா எழுதிய "கிரிக்கெட்டர் மனைவியின் டைரி" என்ற புத்தகத்தை வெளியிட்ட ரோகித் சர்மா அந்த நிகழ்வில் தனது தந்தை பற்றி மனம் திறந்து பேசினார். அப்போது, தனது தந்தைக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது தனி மரியாதை உண்டு என தெரிவித்தார்.
இது குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-
என் தந்தை போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றினார். என் தாய் என்ன செய்தார் என்பதை நான் கூறியிருந்தேன். அதை போன்றே என் தந்தை நாங்கள் தற்போது வாழும் வாழ்க்கைக்காக நிறைய தியாகங்களை செய்திருக்கிறார். என் தந்தை எப்போதும், டெஸ்ட் கிரிக்கெட் மீது தனி பிரியம் கொண்டுள்ளார்.
அவருக்கு புதிய தலைமுறை கிரிக்கெட் பிடிக்காது. நான் ஒருநாள் போட்டிகளில் 264 ரன்களை அடித்த நாள் இன்றும் நினைவில் உள்ளது. அன்றைய தினம் போட்டிக்கு பிறகு அவரை சந்தித்தேன். அப்போது அவர் எல்லாம் சரி, நன்றாக விளையாடினாய் என்று கூறினார். எனினும், அவரது பாராட்டில் எவ்வித சுவாரஸ்யமும், அதீத மகிழ்ச்சியம் காணப்படவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் 30, 40, 50 அல்லது 60 ரன்களை குவித்தால் கூட அவர் அதைப் பற்றி விரிவாக என்னிடம் பேசிக் கொண்டிருப்பார். அவர் டெஸ்ட் கிரிக்கெட் மீது அத்தகைய காதல் கொண்டிருந்தார். அவர் எப்படியிருந்தாலும், முன்னேற வேண்டும் என்றே விரும்புவார் என ரோகித் கூறினார்.
- நான் சிவப்பு பந்துடன் நிறைய கிரிக்கெட் விளையாடுவதை என் அப்பா பார்த்திருக்கிறார்.
- நான் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது அவர் கொஞ்சம் ஏமாற்றமடைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மே 2025-ல் அறிவித்தார். அவரது ஓய்வு அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.
இந்த முடிவுக்கு சமீபத்திய ஆட்டங்கள் காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2024-25 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் பேட்டிங் (5 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள், சராசரி 6.20) மற்றும் கேப்டன்ஷிப்பில் ஏமாற்றமளித்ததாக இருக்கலாம்.
இந்நிலையில் தாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு தனது தந்தைக்கு ஏமாற்றமடைந்தது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சிவப்பு பந்தில் நான் விளையாடிய போட்டிகளை என் தந்தை அதிகளவில் பார்த்திருக்கிறார். அவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டை அதிகம் பாராட்டுவார். அந்த வகையில், நான் ஓய்வு அறிவித்தது அவரை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது. எனினும், அவரிடம் அதே அளவுக்கு மகிழ்ச்சியும் இருந்தது. அது தான் என் தந்தை.
நான் இன்று இந்த நிலையில், இருப்பதற்கு அவர் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார். அவரது உதவியின்றி, இது எதுவும் சாத்தியமில்லை என ரோகித் கூறினார்.
- இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
- சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, விமானம் மூலம் நேற்றிரவு இங்கிலாந்துக்கு புறப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) தொடரின் அங்கமாக நடைபெற உள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தொடர் வருகிற 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை உள்ளது. இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில்லின் முதல் சோதனை இது என்பதால் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து விமானம் மூலம் இங்கிலாந்துக்கு நேற்றிரவு புறப்பட்டது.
அப்போது ரசிகர் ஒருவர், ரிஷப் பண்ட்டிடம் ரோகித் சர்மா எங்கே என கேள்வி எழுப்பினர். அதற்கு ரிஷப் பண்ட், அவர் தோட்டத்தில் ஜாலியாக இருக்கிறார். அந்த தோட்டத்தை நான் மிஸ் செய்கிறேன் என சிரித்தபடி பதில் அளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு எப்போதும் கிடைக்கப் போவதில்லை.
- என்னுடைய கேரியருக்கும் ஒருநாள் முடிவு வரும் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்த கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்த ஆர்சிபி முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் தற்போது வெறித்தனமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் என்னால் இம்பேக்ட் வீரராக விளையாட முடியாது என்றும் களத்தில் இம்பேக்ட் ஏற்படுத்த விரும்புகிறேன் என்றும் விராட் கோலி கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு எப்போதும் கிடைக்கப் போவதில்லை. என்னுடைய கேரியருக்கும் ஒருநாள் முடிவு வரும் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி எனது கேரியரை முடித்து விட்டு வீட்டில் இருக்கும் போது என்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டேன் என்று நான் சொல்ல வேண்டும்.
அதை சொல்ல வேண்டுமெனில் என்னால் இம்பேக்ட் வீரராக விளையாட முடியாது. மாறாக 20 ஓவர்களும் முழுமையாக விளையாடி களத்தில் இம்பேக்ட் ஏற்படுத்த விரும்புகிறேன். நான் அப்படிப்பட்ட வீரர். அது போன்ற திறமையில் கடவுள் என்னை ஆசீர்வதித்துள்ளார். அதை வைத்து நீங்கள் பல்வேறு வழிகளைக் கண்டறிந்து அணிக்கு உதவ வேண்டும்.
என்று கூறினார்.
ரோகித் சர்மா இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் இம்பேக்ட் வீரராக இருந்தார். இதனால் விராட் கோலி ரோகித் சர்மாவை கலாய்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- ஐபிஎல் தொடரில் 300 சிகர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார்.
- ஐபிஎல் தொடரில் 7000 ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்றில் மும்பை - குஜராத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- ரோகித் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் அரை சதம் கடந்தார். இதில் 2 சிக்சர், 8 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் ரோகித் சர்மா 2 சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி இந்த போட்டியில் 2 சிக்சர்கள் விளாசியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 300 சிகர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார். மொத்தமாக 2-வது வீரர் ஆவார்.
முதல் வீரராக கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடரில் 7000 ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார். முதல் இடத்தில் விராட் கோலி 8618 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
- பட்லர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
- இது குஜராத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
VIDEOஇந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் பட்லர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது குஜராத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சமகாலத்தில் மிகவும் கவர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தான் என்று ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணலில் கடந்த சில ஆண்டுகளில் உங்களை மிகவும் கவர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? என்று ஜாஸ் பட்லரிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பட்லர், "அது ரோகித் ஷர்மாதான். சிறப்பாக விளையாடி இந்திய அணியை நேர்த்தியாக வழி நடத்தினார். நான் ரோகித்தின் மிகப்பெரிய ரசிகன்" என்று தெரிவித்தார்.
- 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது தோனி பாதியிலேயே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
- இதே மாதிரி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற ரோகித் சர்மா முடிவு செய்து இருந்தார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் திடீரென அறிவித்தார். அவரைதொடர்ந்து விராட் கோலியும் டெஸ்டில் ஓய்வு முடிவை வெளியிட் டார்.
இருவரும் ஏற்கனவே 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். ஒருநாள் போட்டியில் மட்டுமே ஆடுவார்கள்.
இந்த நிலையில் ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தோனி பாணியில் அவர் ஓய்வு பெறும் திட்டத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ.) பரிந்துரை செய்து உள்ளார். ஆனால் பி.சி.சி.ஐ. அதை நிராகரித்துள்ளது.
2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது தோனி பாதியிலேயே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதே மாதிரி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற ரோகித் சர்மா முடிவு செய்து இருந்தார். இதை கிரிக்கெட் வாரியம் நிராகரித்து விட்டது. இங்கிலாந்து தொடரில் அவரை கேப்டனாக இல்லாமல் வீரராகவே தேர்வு செய்ய தேர்வு குழு முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் தான் ரோகித் சர்மா திடீர் ஓய்வு முடிவை எடுத்ததாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
- ரோகித் ஸ்டாண்டை அவரது அப்பா, அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
- புதிய ஸ்டாண்டை திறக்கும் போது அருகில் இருந்த அவரது மனைவி ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட் திறக்கப்பட்ட போது மேடையில் இருந்த அவரது மனைவி கண்கலங்கினார். குறிப்பாக கண்ணீருடன் ரோகித் சர்மாவை ஒரு பார்வை பார்ப்பார். அதில் கணவன் மீதான மனைவியின் அன்பு வெளிப்பட்டதை பார்க்க முடிந்தது. மேலும் அவரது தாய், தந்தையும் ஆனந்த கண்ணீர் சிந்தினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இது குறித்து ரோகித் கூறியதாவது:-
எனக்கு எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. இது ஒரு சிறந்த உணர்வு. நான் இன்னும் விளையாடும்போது இந்த மரியாதை அதை சிறப்பானதாக்குகிறது. இங்கு இருக்கும் பலருக்கு, குறிப்பாக என் குடும்பத்தினர், என் அம்மா, அப்பா, என் சகோதரர், அவரது மனைவி மற்றும் என் மனைவிக்கு முன்னால் இதைப் பெறுவது ஒரு பெரிய மரியாதை.
என ரோகித் சர்மா கூறினார்.
- இந்த ஸ்டான்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.
- நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது எப்போதும் நிலைத்து நிற்கப்போகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் வான்கடே மைதானம் குறித்த நினைவுகளை ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
ரெயிலில் இவ்வழியாக செல்லும் போதெல்லாம் வான்கடே மைதானத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டே பயணித்த நாட்களை நினைவுகூர்கிறேன். இந்த ஸ்டான்ட் மிகவும் ஸ்பெஷல். நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது எப்போதும் நிலைத்து நிற்கப்போகிறது.
இவ்வாறு ரோகித் கூறினார்.